Super User / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அம்பாறை மாவட்ட ஜம்ய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா எழுதிய 'நான்கு கலீபாக்கள்' நூல் வெளியிட்டு நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதேவேளை, அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.முபாரக் விசேட அதிதியாக கலந்துகொண்டதுடன் பேருவளை ஜாமிஆ நளீமிய்ய கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் விசேட உரையாற்றினார்.
இந்நூலின் சிறப்பு பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் தொழிலதிபர் முஸ்லிம் சாலாஹுதீன் உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமா சபையின் பிரதி தலைரும் கல்முனை அல் - ஹாமியா அரபு கல்லூரியின் பணிப்பாளருமாவார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
2 hours ago
2 hours ago
muheeth samsudeen Tuesday, 13 December 2011 10:15 PM
இஸ்லாமிய நாகரீகத்திற்கு பெரிதும் உதவும், நல்ல காரியம்.
Reply : 0 0
mazdariyas Sunday, 18 December 2011 11:55 AM
முஸ்லிம்கள் பொன் ஆடை போர்த்துவதை தவிர்த்து கொள்வது நல்லது நல்ல விடயங்கள் வெளிச்சத்துக்கு வர அல்லஹ்ஹ விடம் பிராத்திப்போம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago