A.P.Mathan / 2012 ஜனவரி 20 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை கடந்த புதனன்று கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவராக மூத்த சட்டத்தரணி கே.வி.தவராஜாவும், செயலாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனும், பொருளாளராக எஸ்.சிவலோகநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.
கொழும்பு பம்பலப்பிட்டி, றிட்றீட் அவெனியூவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கொழும்பு மாவட்டக் கிளையின் துணைத் தலைவர்களாக சி.இரத்தினவடிவேல், மா.தேவராஜா ஆகியோரும், துணைச் செயலாளராக கே.உதயகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமந்திரன் எம்.பி உட்பட ஒன்பது பேர் செயற்குழுவுக்குத் தெரிவாகினர்.
தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை பதிவு செய்து, கொழும்பு மாவட்டக் கிளையை விரிவுபடுத்தி, செயலூக்கப்படுத்துவது என்றும் - கொழும்பு மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் வகையில் மாதாந்த சந்திப்புகள், கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றை நடத்துவது என்றும் - கடந்த வருடம் போன்று இம்முறையும் தலைநகரில் தந்தை செல்வா நினைவு தினக் கூட்டத்தை உரிய அளவில் ஏற்பாடு செய்வது என்றும் - கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago