Suganthini Ratnam / 2012 ஜனவரி 22 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா )
நீர்கொழும்பில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மதில் உடைந்து வீழ்ந்ததில் மரணமடைந்துள்ளனர். நீர்கொழும்பு பெரியமுல்லையிலுள்ள லாஸரஸ் வீதியிலேயே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
லாஸரஸ் வீதியை சேர்ந்த மொஹமட் நவுபர் நிப்லான் (வயது 5) மஹாஹுனுப்பிட்டி யூட் மாவத்தையை சேர்ந்த மொஹமட் ஜெய்சம் (வயது 12) ஆகிய சிறுவர்களே இவ்வாறு பலியானவர்கள் ஆவர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தில் மரணமான மொஹமட் நவுபர் நிப்லான் (வயது 5) என்ற சிறுவனின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மதில் உடைந்து விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுவர்கள் இருவர் மீதும் வீழ்ந்தது. இதில் படுகாயமடைந்த இச்சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
5 வயதான மொஹமட் நவுபர் நிப்லான் என்ற சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரணமாகியுள்ள அதேவேளை, 12 வயதான மொஹமட் ஜெய்சம் என்ற சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமாகியுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லேவவின் உத்தரவுக்கமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago