Super User / 2012 ஜனவரி 24 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச சார்பற்ற நிறுவனமான 'விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்' கொழும்பிலுள்ள அலுவலகம் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்குள்ள ஆவணங்கள் கிளறி ஆராயப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு அல்லது இன்று அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு டொரிங்டன் அவெனியூவிலுள்ள இந்த அலுவலகத்தின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், கபர்ட்டுகளையும் உடைத்து இருந்த கோப்புகள் ஆவணங்களை ஆராய்ந்துள்ளதாக அவர் கூறினார்.
அலுவலகத்திலிருந்து பெறுமதியான பல பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. எனினும் 15,000 பணம் மாத்திரம் காணாமல் போயுள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து மேற்படி அலுவகலத்திற்கு வந்த கறுவாத்தோட்ட பொலிஸார் கைரேகைப் பதிவு நடவடிக்கையை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆவணங்கள் எதுவும் காணாமல் போயுள்ளனவா என்பது இன்னும் தெரியவில்லை என மேற்படி உத்தியோகஸ்தர் கூறினார்.
வடக்கு கிழக்கில் இலவச சட்ட உதவிகளை வழங்கிவரும் விழுது நிறுவனம் ஊடக கற்கை நெறிகளை நடத்துவதுடன் ஆசிரியர்களுக்கான அகவிழி, மற்றும் பெற்றோர்களுக்கான கல்லூரி சஞ்சிகைகளையும் வெளியிடுகின்றது.





55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago