Menaka Mookandi / 2012 ஜனவரி 25 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மகசின் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற கலவரம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் அத்யட்சகர் சஞ்சீவ தர்மரட்ண தனக்கு தெரிவித்ததாகவும் மேலும் இக்கலவரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தப்படவில்லை எனவும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தன்னிடம் தெரிவித்ததாகவும்' ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிதாக கடமையேற்றிருக்கும் உதவி பொலிஸ் அத்யட்சகர் எழில் ரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு வரும் உறவினர்களின் பொதிகளை கடுமையாக சோதனை செய்ததன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக சிறைச்சாலை புணர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார்.
பொலிஸ் அத்யட்சகருடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமைகளை கேட்டறிந்த பொழுது இச்சிறைக் கைதிகளின் தாக்குதலில் எந்த தமிழ் அரசியல் கைதிகளும் சம்பந்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் கண்ணீர்ப் புகைக்குண்டுவீச்சில் தமது இருப்பிடங்களும் பாதிக்கப்பட்டதாக தமிழ் அரசியல் கைதிகள் என்னிடம் தெரிவித்தனர்.
அதேநேரம் தம்மையும் இந்த நடவடிக்கையில் பங்குபற்றுமாறு ஏனைய கைதிகள் அழைத்தும் தாம் அதில் பங்குபற்றவில்லை என தெரிவித்தனர். அதனால் தமக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தனர். இது சம்பந்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக முழுமையான முறையிலே நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது இப்படியான சட்டவிரோத செயல்களில் இவர்கள் ஈடுபடாமலிருந்தமை பாராட்டக்கூடிய விடயமாகும். ஏற்கனவே பூசா முகாமிலுள்ள 15 தமிழ் கைதிகள் புணர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஏனைய கைதிகளின் விடுதலைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது இவ்வாறான செயல்பாடுகளில் இவர்களை ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago