Kogilavani / 2012 ஜனவரி 31 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. என்.முனாஷா)
நீர்கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு அங்குருகாரமுல்லை விகாரைக்கு அருகில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வலது கையில் காயங்களுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர் பின்னர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாநகர சபை உறுப்பினர் தனது மகளை இன்று காலை பாடசாலையில் விட்டுவிட்டு திரும்பி வரும் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்து வந்தவர் மாநகர சபை உறுப்பினரை வாள் ஒன்றினால் வெட்ட முயன்றுள்ளார். இதன்போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago