2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு சிறு மீன்பிடி துறை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 ஜனவரி 31 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே. என்.முனாஷா )

நீர்கொழும்பு கொட்டுவ மைதானம் அருகில் உள்ள (திறந்த மீன்விற்பனை சந்தையருகில் ) கடலோரப் பகுதியில் கருவாடு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கருவாடு தயாரிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு மீன்பிடித் துறை மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு மற்றும் குடாப்பாடு ஆகிய பிரதேசங்களில் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு மீன்பிடி நடவடிக்கைக்கு செல்லாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தி நின்று எதிர்ப்பை தெரிவித்தனர்.
தங்களிடம் மீன்களை கொள்வனவு செய்யாமல் (வாங்காமல்) வெளியிடங்களிலிருந்து மீன்களை கருவாடு தயாரிப்பதற்காக வாங்குவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர்

இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தில் நீதிமன்றம்  இருப்பதன் காரணமாக அமைதியை பேணுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.

இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
ஆயினும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X