2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

போலி முத்திரைகளை பயன்படுத்தியதாக சட்டத்தரணி மீது வழக்கு

Super User   / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

காணி உறுதிப்பத்திரங்களுக்காக போலிமுத்திரைகளை  பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணியொருவரையும் காணி உரிமையாளர் ஒருவரiயும் தலா 40,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 5 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும்  செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.

ஆரியபால பெத்மகே மற்றும் சுனில் சமரகோன் ஆகிய இவ்விருவரும் காணி பதிவுகளுக்கு சமர்ப்பித்த ஆவணத்தில்  3500 ரூபா பெறுமதியான போலி முத்திரைகளை ஒட்டியதாக சட்டமா அதிபரினால் குற்றம்சுமத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கல்கிஸையில் 01.10.2005 ஆம் திகதி இக்குற்றத்தை புரிந்ததாக குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

இவர்கள் பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தபத்து அனுமதியளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X