Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கை ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் இரண்டாவது ஆலோசனைக்குழுக் கூட்டம் வர்த்தக மற்றும் வியாபாரத் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இலங்கையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான ஆலோனைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
கடந்த கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியினை இலகுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சு, நிதி அமைச்சு, தொழில் அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பெற்றோலிய மற்றும் எரிசக்தி அமைச்சு, இறைவரித் திணைக்களம், இலங்கை ஆபரணங்கள் மற்றும் இரத்தினக்கற்கள் அதிகார சபை, சுங்கத் திணைக்களம், ஏற்றுமதி அபிருத்திச் சபை உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான அமைச்சுக்களும் திணக்களங்களும் கலந்துகொண்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன், 'கடந்த வருடத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு கைத்தொழில்த்துறை பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது. அதனது ஏற்றுமதி வளர்ச்சி 22.2 சதவீதத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. இது ஏற்றுமதியின் பதிவாக 9.5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகிறது' என்றார்.
.jpg)
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago