Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு நகர மத்தியின் பிரதான வீதியில் உள்ள குதிரைப் பந்தய முகவர் நிலையம் ஒன்றில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
நீர்கொழும்பைச் சேர்ந்த பேர்னாட் (வயது 55) என்பவரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
குதிரைப் பந்தயம் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு நண்பர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் நீர்கொழும்பு பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago