Super User / 2012 மார்ச் 19 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க. உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவை கைது செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிடிவிறாந்து பிறப்பித்தது.
கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் கடமையை செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கித்சிறி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றுக்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியதாலேயே இப்பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
மார்ச் 19 ஆம் திகதி (இன்று) நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. எனினும் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அதையடுத்து அவருக்கு எதிராக நீதவான் கனிஷ்க விஜேரட்ன பிடிவிறாந்து பிறப்பித்தார். இவ்வழக்கு விசாரணை ஜூன் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
14 minute ago
40 minute ago
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
40 minute ago
51 minute ago
57 minute ago