2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

என்னை குற்றவாளியாக காட்டி வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சிலர் முற்பட்டனர்: றிசாத் பத

Kogilavani   / 2012 நவம்பர் 26 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.எம் பௌஸான்)

'நான் எமது சமுதாயத்துக்காக குரல் கொடுத்ததால் என்னை குற்றவாளியாக காட்டி வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சிலர் முற்பட்டனர். இன்று கல்வி என்பது மிக முக்கியமானதொன்றே. ஆனால் இதில் நாம் பின்னடைந்திருக்கின்றோம். எம்மில் சிலர் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் முன் நிற்கின்ற சமூகம் என கூறிக்கொண்டாலும் அதிலும் இன்று நாம் பின்னடைந்தே நிற்கின்றோம். எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கற்று உலகை வெல்லவேண்டும்' என கைத்தொழில் வணிகத்துறை  அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மல்வானை கல்வி முன்னேற்றக் கழகம் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்;கிடையில் நடத்திய (க.பொ.த) சாதாரண தர முன்னோடிப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியின் ஏ.ஆர்.எம் லாபிர் ஹாஜியார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்பேதே அவர் இதனை தெரிவித்தார்.

கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சாகிர் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனர்த்த நிவாரண சேவைகள் பிரதி அமைச்சரும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பியகம தொகுதி அமைப்பாளருமான  துலிப்விஜேசேகர,  நாடாளுமன்ற உறுப்பினர் பியகம,  ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ருவன் விஜயவர்தன, நீர்கொழும்பு மேல் நீதிபதி எம்.எம்.ஏ கபூர்உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலை மட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்றுகொண்ட திஹாரிய அல்.அஸ்ஹர் தேசிய கல்லூரி மாணவர்களுக்கு  முறையே 20000,  17000, 15000,   காசோலைகள் ரூபாய்  வழங்கப்பட்டதோடு மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 8 மாணவர்கள் பதக்கம் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






  Comments - 0

  • A.S.kiyamudeen Tuesday, 27 November 2012 05:17 PM

    வரவேட்கப்பட வேண்டிய விடயம். பாராட்டுக்குரியது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X