2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு செயலமர்வு

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளின் நிருவாகம் தொடர்பிலேயே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதியுயர் பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்தங்களும் என்ற தலைப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்னவும் மாகாண சபைகளின் நிருவாக முறைமை எனும் தலைப்பில் ஓய்வுபெற்ற  சிவில் அதிகாரியான கே.பி. சிறிசேன ஆகியோர் விரிவுரைகளை வழங்கினர்.






  Comments - 0

  • kalmunai Monday, 03 December 2012 06:50 PM

    செயலமர்வு செய்தாவது சேவை செயுங்கோ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X