2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பிரதம நீதியரசருக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன ஆகியோரின் படங்களை கொண்டு அவதூறாக எழுத்தப்பட்ட ஒரு மூடை துண்டுப் பிரசுரங்கள் உயர் நீதிமன்ற நுழைவாயிலில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.

சிங்களத்தில் எழுத்தப்பட்ட இந்த துண்டுப் பிரசுரங்களில் இவர்களின் நடவடிக்கைகள், தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கை தொடர்பில் அவதூறாக எழுத்தப்பட்டிருந்தது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் வெளியீட்டாளரின் பெயர் இந்த துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(ரி.பாரூக் தாஜுதீன்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X