2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தகவல் தொழில்நுட்ப பாடநெறியை செய்த முப்படையினருக்கு சான்றிதழ் வழங்கல்

Super User   / 2013 ஜனவரி 16 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


2011ஆம் ஆண்டு தேசிய மாணவர் படையணியின் மூலமாக நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த முப்படையினர் மற்றும் மாணவர் படையணியை சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபையின் மூலமாக வழங்கப்படும் இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விமானப் படை வீரர்கள் இருவர், இராணுவ வீரர்கள் ஐவர், கடற்படை வீரர் ஒருவர் உட்பட 30 மாணவர் படையணியினர் சான்றிதழ் பெற்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X