2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பு மாநகரசபையின் நிலையியற் குழு உறுப்பினர் தெரிவு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் 2013ஆம் ஆண்டுக்கான நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் வியாழக்கிழமை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட போது ஜனநாயக மக்கள் முன்னணி உதவி பொது செயலாளரும் மாநகரசபை உறுப்பினருமான சண் குகவரதன் மீண்டும் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நிலையியற் குழுக்களின் தலைவராகவும் சுகாதாரம் தொடர்பான நிலையியற்குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

வறிய மக்கள் மேம்பாட்டு குழுவின் தலைவராக ஜனநாயக மக்கள் முன்னணி சிரேஷ்ட பிரதி தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான வேலணை வேணியனும் இக்குழுவில் உறுப்பினராகவும், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் குழுவின் தலைவராகவும், மாநகரசபை உறுப்பினர் குருசாமி தெரிவு செய்யப்பட்டதுடன்,

நிதிநிலையியற் குழுவின் உறுப்பினராக மாநகரசபை உறுப்பினர் பிரியாணி குணவர்த்தனவும் சட்டக் குழு மற்றும் வறிய மக்கள் மேம்பாட்டுக் குழுவில் உறுப்பினராக மாநகர சபை உறுப்பினர் லோரஸ் அவர்களும் குப்பை கூளங்கள் அகற்றும் குழவில் வேலணை வேணியன் ஆகியோர் தெரிவானார்கள்.

கட்சியின் ஊடக செயலாளரும் மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா வீடமைப்பு நகர அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் சுற்றாடல் பாதுகாப்பு குழ உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டவேளை மாநகர சபை நூலக அபிவிருத்திக் குழுவில் மாநகர சபை உறுப்பினர்களான சண் குகவரதன், பாஸ்க்கரா உள்ள வேளை ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் லயன் மனோகரன் வு.மனோகரன், பொறியியலாளர் சஞ்சீவன் மோகன்ராஜ், உப அதிபர் கணபதிப்பிள்ளை ஊடகவியலாளர் கணேஷன் ஆகியோர் 2013ஆம் ஆண்டின் உறுப்பினர்களாக பிரேரிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X