2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

'ஆதிக்க சித்தாந்தங்களை உடைத்தெறிவதற்கான இணைய நுட்பங்கள்' பயிற்சி பட்டறை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஆதிக்க சித்தாந்தங்களை உடைத்தெறிவதற்கான இணைய நுட்பங்கள்', 'இணையத்தளங்களை கிரமமாக நடத்துவதும், அதற்கான எளிய வழிவகைகளும்' எனும் தொனிபொருளில் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

நமதுமலையகம்.கொம், பெண்ணியம்.கொம், தலித்தியம்.கொம் ஆகிய மூன்று இணையத்தளங்கள் இணைந்து இப்பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்திருந்தன.

இப்பயிற்சிப் பட்டறையில், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் உட்பட ஏனைய துறைசார் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சிப் பட்டறைக்கான விரிவுரையை சரிநிகர் என்.சரவணன் (சாரா) நடத்தியிருந்தார்.
இதன்போது உரையாற்றிய அவர்,

'மனித வாழ்வில் சமூக பணி, அரசியல் பணி என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் இணையத்தின் முக்கியத்துவம் கருதி இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சிப்பட்டறையானது ஆதிக்க சித்தாந்தங்களை உடைத்தெறிவதற்கான இணைய நுட்பங்கள் தொடர்பிலான அறிதலை உங்களுக்கு தரும்.

இவ்வாறான பயிற்சிப்பட்டறை ஒன்றை இலங்கையில் நடத்த வேண்டுமென்று முடிவு செய்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.  ஆனாலும்; அதற்கான காலம், சூழல் சரியாக அமையபெறவில்லை' என்று தெரிவித்தார்.

இப்பயிற்சிப் பட்டறையில் தனிமனித சுதந்திர ஊடக வெளியாக அமைந்துள்ள வலைத்தளங்கள் தொடர்பிலும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X