2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கடலில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்  
   
 
நீர்கொழும்பு கடலில் நேற்று சனிக்கிழமை மூழ்கிய சிறுவன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களனியை சேர்ந்த 13 வயதான ஹப்புகாமி இசுறு லக்சிறி பெரேரா என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத்துடன் நீர்கொழும்புக்கு வந்த குறித்த சிறுவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி நேற்று காணாமல் போயுள்ளார்.

இந்நிலையிலேயே அவரது சடலம் நீர்கொழும்பு போர்தொட்டுவ பகுதியில் கரையொதுங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X