2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நகைக்கடையில் கொள்ளை; சந்தேக நபர் பொலிஸில் சரண்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்  

நீர்கொழும்பில் நகைக் கடையொன்றின் ஊழியர் மீது அசிட் வீச்சு மேற்கொண்டுவிட்டு 400,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவர், நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்  சரணடைந்துள்ளார்.

இச்சந்தேக நபர், சட்டத்தரணி ஊடாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை சரணடைந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அசிட் வீச்சுக்கு உள்ளானவர் தொடர்ந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள நகைக் கடையொன்றில் கடந்த வியாழக்கிழமை இக்கொள்ளை இடம்பெற்றது.  இக்கடையின் மேல் மாடியிலுள்ள அறையொன்றில் அசிட் வீச்சுக்குள்ளான ஊழியர் தங்கியிருந்துள்ளார். சந்தேக நபரும் அங்குள்ள கடையொன்றில் நகை தயாரிப்பு வேலை செய்து வந்துள்ளார்.

மேலும், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X