2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி போராட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 11 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான் 

 
சிறு மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று புதன்கிழமை இடம்பெற்றது. நீர்கொழும்பு மீனவ குடும்பங்களை சேர்ந்த பெண்களினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டவர்கள் சிறு மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்புக் கோசங்களையும் எழுப்பினர்.

நீர்கொழும்பு கொட்டுவ மாநகர சபை மைதானத்தின் முன்பாக ஆரம்பமான பேரணி பிரதான வீதி வழியாக வந்து, சாந்த ஜோசப் வீதி வழியாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை சென்றடைந்தது. பின்னர் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் ஸ்ரீ விமுக்தி பெண்கள் அமைப்பு, களப்பு பாதுகாப்பு அமைப்பு, ஜன அவபேபதய கேந்திர அமைப்பு, அகில இலங்கை மீனவ தொழிற் சங்கம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

சீன நிறுவனங்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதியளித்துள்ளமை, நீர்கொழும்பு களப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இடம்பெறும் பல்வேறு நடவடிக்கைகள், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களினால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், இதுபோன்ற நடவடிக்கைகளால் மீனவ பெண்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவில் அரசாங்கத்தினால் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெற்றது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X