2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மனைவியை கொன்ற கணவனுக்கு மரண தண்டனை

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான் 
 
மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை விதிக்க, நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் இன்று வெள்ளிக்கிழமை தீர்;ப்பளித்தார்.

பாலமடம்பெல்ல – கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த செம்புக்குட்டி ஆராச்சிகே டயஸ் ரோஹித்த சில்வா (47 வயது) என்பவரே மரண தண்டனை விதிக்கப்பட்டவராவார்.

பிரதிவாதி சர்வதேச மோட்டார் வாகன ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றுள்ள முன்னாள் கார் ஓட்டபந்தய வீரராவார்.

பிரதிவாதியான கணவர், கடந்த 1995ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20ஆம் திகதி தனது மனைவியான இனோகா டெல்ரின் செலஸ்தினா அமரதுங்க என்ற ஒரு பிள்ளையின் தாயாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனைவி தனது பிள்ளையுடன் படுக்கையில் இருந்த போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது பிரதிவாதியின் வயது 29 ஆகும். கொலை செய்யப்பட்ட மனைவியின் வயது 25 ஆகும்.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எந்தவித சந்தேகத்துக்குமிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நீதவான் பிரதிவாதிக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தார்.

சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டத்தரணி துசித்த முதலிகே ஆஜரானார். பிரதிவாதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷானக்க ரணசிங்க மற்றும் சுரேஸ் ராஜபக்ஷ ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரண நடைபெற்ற காலப்பகுதியில் பிரதிவாதி வெளிநாடு சென்றிருந்த நிலையில் விசாரணை இடம்பெற்றது. பிரதிவாதியின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகி வழக்கு இடம்பெற்று இன்று மரண தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • UTHAYAN Saturday, 21 September 2013 07:12 AM

    தீர்ப்பளித்தார். பிரதிவாதியான தயவுசெய்து தமிழை கொலை செய்யாதே!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .