2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆறு வயது மகனை தாக்கிய தாயாருக்குப் பிணை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 24 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்      
 
ஆறு வயதுடைய தனது மகனை அடித்துக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பான நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பெண்ணொருவரை நீர்கொழும்பு நீதவான் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு – அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தடியினாலும் கைகளினாலும் தாக்கப்பட்டமையினால் அச்சிறுவனின் உடம்பின் சில இடங்களில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவன் தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேக நபரான பெண்ணுக்கு மூன்று வயதிலும் ஆறு வயதிலும் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அவர் தனது மூத்த மகன் மீதே தாக்குதல் மேற்கொண்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது கணவர் நீர்கொழும்பு மாநகர சபையில் தொழில் புரிபவராவார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுவனை சிறுவனின் பாட்டியின் பாதுகாப்பில் ஒப்படைக்குமாறு நீதவான் நீர்கொழும்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .