2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு சிறை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு நீதிமன்ற தொகுதியில் பணியாற்றும் சட்டத்தரணி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும்  நபருக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.பி.அமரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை 10 வருட காலம் ஒத்திவைத்த ஒரு வருட சிறை தண்டணை விதித்தார்.

நீர்கொழும்பு, ஜயரத்ன வீதியை சேர்ந்த கே.புஸ்பகுமார என்பவரே சிறை தண்டணை விதிக்கப்பட்டவராவார். இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் நீர்கொழும்பு நீதிமன்ற தொகுதியில் பணியாற்றும் அபேசிங்க முதியான்ஸலாகே இந்திக சந்தன அபேசிங்க என்ற சட்டத்தரணியாவார்.

சந்தேக நபர் முறைப்பாட்டாளரின் வாடிக்கையாளரரவார். இந்நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடொன்றை அடுத்து சந்தேக நபர் முறைப்பாட்டாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பின்னர் அவர் வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்தும் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பாக சட்டத்தரணி பொலிஸில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது தன்மேல்; சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்தே இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாத காலம் வீதம் ஒரு வருட சிறை தண்டணை விதித்த  நீதவான், குறித்த சிறை தண்டணையை  10 வருட காலம் ஒத்திவைத்தார். அத்துடன் பிரதிவாதிக்கு சட்டத்தரணியிடம் மன்னிப்புக் கேட்குமாறும் உத்தரவிட்டார்.மீண்டும் அதே குற்றத்தை புரிந்தால் தண்டணையை உடனடியாக அமுல்படுத்துமாறும்  நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .