2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கொழும்பில் கொரியன் கோனர் திறப்பு

Super User   / 2014 ஜனவரி 24 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பொது நூலகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை கொரியன் கோனர் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டவுள்ளது.

இலங்கையில் கொரிய கலாசாரத்திற்கு அதிக கேள்வி காணப்பட்டமையினால் இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோங்மூன் செய்யினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கொரிய புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், மற்றும் இசை இறுவெட்டுக்களை இந்த கொரியன் கோனரில் பெற முடியும்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவு மேம்படுத்தலை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள கொரிய தூதுவராலயம் தெரிவித்தது. கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோங்மூன் செய் ஆகியோரினால் கொரியன் கோனர் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X