2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பாத்திரம் திருடியவர் மடக்கி பிடிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 03 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பில் பழைய சிலாபம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (03) முச்சக்கரவண்டியில் வந்த இனம்தெரியாத நால்வர் திருட முற்பட்ட வேளை, குறித்த நால்வரில் ஒருவர் பிரதேசவாசிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்துடன் மூவர் தப்பியோடியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் உள்ள பெண்ணொருவர் கூக்குரலிட்டதன் பின்னரே மேற்படி நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டிலுள்ள அனைவரும் தேவையொன்றிற்காக வெளியே சென்றிருந்த வேளை குறித்;த பெண் மாத்திரம் தனியே இருந்துள்ளார். வீட்டின் பின்புறமாக ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து சமையலறை பக்கம் சென்றுள்ளார்.

அப்போது மதில் வழியே வந்த நபர் வீட்டின் பின்பக்கம் வைத்திருந்த சமையல் பாத்திரங்களை திருடி மதிலின் வெளியே இருந்தவர்களுக்கு கொடுத்ததை கண்டுவிட்டே குறித்த பெண் கூக்குரல் எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வந்த பிரதேச வாசிகளால் முச்சக்கர வண்டியை ஓட்டி வந்தவர் மாத்திரம் அகப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழியால் வந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X