2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பசும்பால் உற்பத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2014 நவம்பர் 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


பசும்பால் உற்பத்தி தொடர்பாகவும்  அதனை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படும் வழிவகைகள் தொடர்பிலுமான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கரிஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை(4) நடைபெற்றது.

நீயுசிலாந்திலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆரம்ப கைத்தொழில் அமைச்சரும் ஒட்டாக்கி உறுப்பினருமான நாதன் கைய், ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஆலோசகர் பில் டி லா மரே, இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் கிரஹாம் மோர்ட்டன், நியுஸ்லாந்து கன்சலேட் ஜெனரல் டி.அகா ஒரேரி ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் எல்லேகல, மில்கோ நிறுவனத்தின் தலைவர் சுனில் விக்ரமசிங்க, அமைச்சின் தற்காலிக செயலாளர் திசேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X