2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நீர்கொழும்பில் பதற்றம்

Kanagaraj   / 2014 நவம்பர் 06 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பில் இரு மீனவக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மீனவர்கள் இருவர் காயமடைந்தமையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மீன்கள் நீர்கொழும்பு கொட்டுவை மைதானம் அருகில் உள்ள மீன் விற்பனைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கும் அங்குள்ள கடற்கரையோரத்தில் கருவாட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கும் அவற்றை விற்பனை செய்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பு கடற்கரைத் தெரு - குடாப்பாடு சிறு மீன்பிடித்துறையினர் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X