A.P.Mathan / 2015 ஜனவரி 06 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இங்கு வந்திருக்கும் 3,000 இற்கும் அதிகமான மக்கள் தங்களுக்கு அரச தொடர்மாடி வீடுகள் கிடைக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கின்றார்கள். இவர்களுக்கு இந்த வருடமும் அடுத்த வருடமும் கட்டி முடிக்கவிருக்கும் அரச தொடர்மாடி வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என நேற்று மாலை கொழும்பு மோதர பிரதீபா மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் உரையாற்றும் போது மக்களுக்கு நேரடியாக உறுதியளித்தார். இக்கூட்டத்தில் பாதுகாப்பு நகர அபிவிருத்தி செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .