2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

உணவு பதனிடல் பயிற்சி நெறி

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு சுகாதாரமும் ஆரோக்கியமும் நிறைந்த உணவு பதனிடல் பயிற்சி நெறி வழங்கப்பட்டு வருவதாக இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் சமூக பெண்சாரணிய, நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் பிரியந்தி ஹேமமாலி ராஜபக்ஷ     தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் தலைமையகத்தில் உணவு பதனிடல் கண்காட்சிப் பயிற்சி நெறி  நேற்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றது.

இதில் மிகக் குறுகிய நேரத்தில் போஷாக்கும் சுகாதாரமும் நிறைந்த சுவைமிகு உணவுகளைத் தயாரித்து கண்காட்சியில் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பிஸ்ஸா, பிரியாணி, டோனட்ஸ், கட்லட், அப்பம், பிஸ்கட், கரமல் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்கள் நேற்றைய உணவு பதனிடல் உற்பத்திக் கண்காட்சியில் இடம்பிடித்திருந்தன.

ஆசிய பசுபிக் பிராந்திய உலக பெண்கள் சாரணிய அமைப்பு இப்பயிற்சி நெறிக்கு அனுசரணை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் சமூக பெண்சாரணிய, நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர்   பிரியந்தி ஹேமமாலி ராஜபக்ஷ,    இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் உதவி ஆணையாளர் விசாகா திலகரெட்ன, வளவியலாளர் அநோமா தமயந்தி   உள்ளிட்ட, மற்றும் பயிலுநர்களும்  கலந்து கொண்டனர்.
 
இலங்கை பெண் சாரணிய சங்கம் முன்வந்து கற்றுக் கொள்ள ஆர்வமாயிருக்கும் பெண்களுக்கு தையல் பயிற்சி, கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி, கணனிப்பயிற்சி, அழகுக் கலை, சிகை அலங்காரம், பற்றிக் ஆடைத் தயாரிப்பு மற்றும் சௌக்கியப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள்  வழங்கப்பட்டு வருவதாக இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் சமூக பெண்சாரணிய, நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர்    தெரிவித்தார்.




 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X