Sudharshini / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ கூறியதை அதிகாரிகள் செய்தனர். தற்போது அந்த அதிகாரிகள் செய்வதறியாது உள்ளனர். இனி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என மஹிந்த ராஜபக்ஷ கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அந்த சக்தி தற்போது அவர்களிடம் கிடையாது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
நீர்கொழும்பு வின்ட்மில் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
ஏன் அதிக மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும்?; அதிக விலையில் எரிபொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்?; என்று மக்கள் கேட்கத் துவங்கினர். மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. அதன் விளைவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது என்பது கசினோ சூதாட்டக்காரர்களை ஊக்குவிப்பது என்றே கடந்த கால அரசாங்கம் கருதியது. வெளிநாடுகளில் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறியது பொய்யானது. ஊழல், வீண் விரயமே அபிவிருத்தி என்ற போர்வையில் இடம்பெற்றது. இதற்கு எதிராக மக்கள் எழுந்தனர். இது சிங்கள மக்களுக்கு விளங்கியது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு இது நன்கு புரிந்தது விட்டது.
100 நாட்கள் வேலைத் திட்டத்தில் சுற்றுலாத்துறைப் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சுற்றுலாத்துறைப் பற்றி அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எனது உதவியை பெறமுடியும் என்றார்.
நீர்கொழும்பு ஹோட்டல் மற்றும் விடுதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், சங்கத்தின் செயலாளர் பிரியங்க பீரிஸ், எற்பாட்டாளர் ரோயின் மெரினஸ், நீர்கொழும்பு சுற்றுலாத்துறை சங்கத்தின் செயலாளர் மெத்திவ் பெர்னாந்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நீர்கொழும்பு சுற்றுலாத்துறை சங்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவிடம் விளக்கினர்.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago