George / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேராசிரியர் க.கைலாசபதியின் மறைவின் 32ஆவது ஆண்டு நிறைவையொட்டி நினைவுப் பேருரை, ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 4.30 மணிக்கு கொழும்பு 6, தர்மராம மாவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
'பண்பாட்டின் தன்மைகளும் இலங்கைத் தமிழர்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி.மௌனகுரு உரையாற்றினார்.
செல்வி திருச்சந்திரன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கல்விமான்களும், படைப்பாளிகளும், இலக்கியவாதிகளும், திருமதி கைலாசபதியும்; கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. செல்வி திருச்சந்திரன் பேராசிரியர் கைலாசபதியுடனான தனது உறவு மூன்று நிலைப்பட்டது என்றார்.
தனது மூத்த அண்ணனுடன் நெருங்கிய நட்பாக இருந்ததில் அறிமுகமாகியது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடைசி சில மாதங்கள் அவரது மாணவியாக கற்க முடிந்தமை இரண்டாவது நிலை. தனது தந்தையாரை பேராசிரியர் தனது ஞானகுருவாக போற்றியமை மூன்றாவது நிலை என்றார்.
பேராசிரியர் மௌனகுருவும் தனது நினைவுப் பேருரையை ஆரம்பிக்கும் முன்னர், பேராசிரியர் கைலாசபதியுடனான தனது உறவு பற்றிக் குறிப்பிட்டார்.
பலவிடயங்களை குறிப்பட்டபோதும் நாட்டுக்கூத்து முதலான கிராமிய கலைகளில் தன்னை ஈடுபட வைத்தமை பற்றி குறிப்பிட்டார்.
அவரது உரையானது பண்பாடு என்றால் என்ன? தமிழகத்தின் பண்பாண்டு கோலங்கள், இலங்கையின் பண்பாடு ஆகிய மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது.
பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையானது அல்ல. அது பன்முகம் கொண்டது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, மன்னார், சிலாபம் என வேறுபட்டதை அழகிய உதாரணங்களுடன் குறிப்பட்டார்.
பிரதேசங்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு சிறுகுழுவினருக்கும் தனித்துவமான பண்பாடுகள் உள்ளன. அவை நிலையானவை என்று சொல்ல முடியாது. காலத்துக்கு காலம் மாறுபடும் என்பதையும் வலியுறித்தினார். மதரீதியான மாறுபட்ட பண்பாட்டுக் கோலங்களையும் சுட்டிக்காட்டினார்.
பன்முகப்பட்ட பண்பாட்டுக் கோலங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒருமைப்படுத்த முயல்வார்கள். சோழர் காலத்தில் பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கு மாறாக சைவம் சிவ வழிபாடு போன்றவை முன்னிலைப்படுத்தியதைக் குறிப்பிட்டார்.
3 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago