Kogilavani / 2015 பெப்ரவரி 26 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.ஷாஜஹான்
தனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவதை சட்ட ரீதியாக உறுதி செய்யுமாறு வலியுறுத்தி சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் நேற்று புதன்கிழமை (25) மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பஸ் நிலையத்துக்கு அருகில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்ட பேரணி, மணிக்கூட்டு சுற்றுவட்டத்தை அடைந்து மீண்டும் சுதந்திர வர்த்தக வலய பஸ்நிலையம் அருகில் வந்தடைந்தது.
இதில் 5,000 மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதைப் போன்று தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரி;ப்பை வழங்குமாறும், அதனை சுற்றுநிருபம் மூலமாக உறுதி செய்யுமாறும் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இது முதலாவது ஆர்ப்பாட்டம் எனவும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கத் தவறினால் தொடர்ந்து போராட்டம் இடம்பெறும் எனவும் அங்கு கூறப்பட்டது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .