Princiya Dixci / 2015 மார்ச் 24 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.
விசேட செயற்றிட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பீலிக்ஸ் பெரேராவுக்கு வாழ்த்து தெரிவித்து ஜா-எல, கந்தான ஆகிய பகுதிகளில் பதாகைகளை வைக்க சென்றவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மீன்பிடி அமைச்சுக்கு சொந்தமான வாகனமொன்றில் வருகை தந்தவர்களே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான மோதல் குறித்து தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், பதாகைகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை பொலிஸாரின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்டது எனவும் பொலிஸ் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
5 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago