Kanagaraj / 2015 மார்ச் 25 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய வயதை 10 வருடங்கள் குறைத்து தயாரிக்கப்பட்ட போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்வதற்கு வருகைதந்த இலங்கை பெண்ணொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நீர்கொழும்பைச்சேர்ந்தவர் என்றும் அவருக்கு 44 வயது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
1971ஆம் ஆண்டு பிறந்த அந்த பெண், தன்னுடைய வயதை 10 வருடங்கள் குறைத்து கடவுச்சீட்டை தயாரித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான அந்தப்பெண், கிவ். ஆர் 661ஆம் இலக்க விமானத்தில் டோஹா ஊடாக இத்தாலி செல்லும் நோக்கிலேயே விமான நிலையத்து நேற்றிரவு வருகைதந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .