Thipaan / 2015 மார்ச் 30 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
முன்னாள் பிரதி அமைச்சர்; சரத்குமாரவுக்கும் மேயர் அன்டனி ஜயவீரவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலின் போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நீர்கொழும்பு பிட்டிபனையில் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு பிட்டிபனையில் அமைக்கப்பட்டள்ள தாய் சேய் நலன்புரி நிலையம், வாசிகசாலை மற்றும் பல்வேறு வசதிகள் அடங்கிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு திடீரென்று தனது ஆதரவாளர்களுடன் வருகைத் தந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன, மேயர் அன்டனி ஜயவீரவுடன் வாக்குவாதப்பட்டார்.
திறப்பு விழா நிகழ்வுக்கு தன்னை அழைக்காமைக்கான காரணத்தை அமைச்சர் சரத்குமார குணரத்ன, மேயர் அன்டனி ஜயவீரவிடம் வினவினார்.
இதன்போது இடம் பெற்ற வாக்குவாதத்தின் போது ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திறப்பு விழா நிகழ்வில் பிரதி மேயர் சகாவுல்லா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


6 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago