Kanagaraj / 2015 ஏப்ரல் 17 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தம் உள்ளிட்ட தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பிலான கலந்துரையாடல், எதிர்வரும் 19ஆம் திகதி ஞாற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறவிருக்கின்றது.
இந்த கலந்துரையாடல், (பம்பலப்பிட்டி மெரைன் டிரைவ்) Marine Drive The Colombo Ocean Hotel இல் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள், சிறிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் முற்போக்கு சக்திகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்வதற்கு உறுதியளித்துள்ளனர்.
இதில், அரசியல் அமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தம், தேர்தல் முறைமை தொடர்பான திருத்தம் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பிலும் ஆராயப்படும்.
இக்கலந்துரையாடலின் போது எட்டப்படுகின்ற தேர்தல் முறைமை மற்றும் அரசியல் அமைப்பு திருத்தம் பற்றிய இறுதி முடிவுகள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றும் அந்த ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஏற்பாட்டுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, பிரபா கணேசன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, கலாநிதி என்.குமரகுருபரன் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .