Princiya Dixci / 2015 மே 03 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தானசாலைகளில் பொது சுகாதார பரிசோதகர்கள், ஞாயிற்றுக்கிழமை (03) பகல் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
நகரின் வர்த்தக பிரதேசம் உட்பட பல பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தானசாலைகளில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பான வகைகள் சுகாதாரத்தை பாதிக்காத வகையில் இருப்பதற்கான அறிவுரைகள் தானசாலைகளை அமைப்போருக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோறு தானசாலைகள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் கூடிய அவதானம் செலுத்தினர்.
நீர்கொழும்பு பொது சுகாதார பரிசோதகர்கள் காரியாலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் இம்முறை 50 க்கும் மேற்பட்ட தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago