Gavitha / 2015 ஜூன் 04 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
இன்று சில பத்திரிகைகளில், 'போதைப்பொருட்களுடன், மேல்மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்ணாந்துவின் சாரதி உட்பட அறுவர் கைது' என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், அது என்னுடைய வாகன சாரதி என்று நிரூபித்தால், தனது பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ரொயிஸ் பெர்ணாந்து இன்று வியாழக்கிழமை (04) தெரிவித்துள்ளார்.
சபை உறுப்பினரின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேல் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில், தனக்கு வழங்கப்படும் வேதனத்தில் இருந்தே தன்னுடன் இப்போதும் பணியாற்றும் சாரதிக்கு சம்பளம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பத்திரிகைச்செய்தி தவறானது என்றும் இதற்கு முன்னர் நீர்கொழும்பில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்துக்கு தன்னிடம் சாரதியாக பணியாற்றிய ஒருவரே காரணம் என்றும் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டது. இது தனது அரசியல் வாழ்க்கைக்கு சேறு பூசும் திட்டமிட்ட குழு ஒன்றின் செயலாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago