Sudharshini / 2015 ஜூன் 08 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள், காணி உறுதிப்பத்திரம் என்பவற்றை போலியாக தயாரித்து வந்த நபரொருவரை நேற்று (07) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காலி –கோட்டை பெடலர் வீதியில் வைத்தே இவரை கைதுசெய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபராதுவ பொலிஸ் நிலையத்துக்கு வந்த நபர் ஒருவரிடம் காணப்பட்ட போலி அடையாள அட்டையை வைத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே, போலியாக ஆவணங்களை தயாரிப்பவரின் விவரம் வெளிவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து அரச அதிகாரிகளின் முத்திரைகள் உட்பட 50 இறப்பர் சீல் கட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். அந்த சீல் கட்டைகளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் சீல் கட்டைகளும் இருந்துள்ளன என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago