Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 09 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மனிதர்களுக்கிடையிலான மனிதாபிமான உறவுகளில், பிளவுகள் மற்றும் மோதல்களோடும் பண்பாடு கொண்டுள்ள நெருக்கமான தொடர்பு பற்றி அறிவார்ந்த ரீதியில் சிந்திக்க வைப்பதே இந்தப் பயிற்சி நெறியின் நோக்கம் என பிலிக்ட் திட்டத்தின் இணைப்பாளர் விஜிதா ரெங்கநாதன் தெரிவித்தார்.
சமூக ஒருமைப்பாடும் சகவாழ்வு எண்ணக்கருவும் எனும் தொனிப்பொருளிலான பயிற்சிநெறி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர்உரையாற்றுகையில்,
அதனால் சமகாலத்தில் சகவாழ்வோடு கூடிய மனித உறவுக்கு பண்பாடு பற்றிய எமது சிந்தனையில் ஆக்கபூர்வமான மாற்றம் வேண்டும். இச்சிந்தனை மாற்றம் இன்று அவசியமானது.
மனித சமூகப் பிளவுகளுக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கும் பண்பாடு வழங்கக்கூடிய ஆக்கபூர்வமான பங்கையும் ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனமும் பிலிக்ட் அமைப்பும் இலங்கை மன்றக் கல்லூரியும் நன்குணர்ந்துள்ளதால் இலங்கையில் வாழும் பல்லின கலாசார பண்பாடுகள் நிறைந்த மக்களிடையே சமூக ஒருமைப்பாட்டையும் சகவாழ்வையும் ஏற்படுத்த விரும்புகின்றன என்றார்.
நாடாளாவிய ரீதியில் பல்வேறு சமூக அமைப்புக்களில் பணியாற்றும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 30 சமூக ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள், எழுத்தாளர்கள், சமாதான சகவாழ்வுச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந்தப் பயிற்சிநெறியில் பங்குபற்றினர்.
ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனமும் இலங்கை மன்றக் கல்லூரியும் இந்தப் பயிற்சி நெறிகளை வடிவமைத்து வழங்கி வருகின்றன.
பிலிக்ட் (FLICT) திட்டத்தின் இணைப்பாளரும் வளவாளருமான விஜிதா ரெங்கநாதன், பாத்திமா ஹுமைறா,
சுலக்ஷனா டி மெல், ஹஷினி ஹபுதந்ரி, மற்றும் லக்ஷ்மன் பெரேரா ஆகியோர் மூன்று மொழிகளிலும் பயிற்சிகளை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago