Kogilavani / 2015 ஜூன் 16 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இசெட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்துக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை நீர்கொழும்பு தமிழர் நலன்புரிச் சங்கம் மற்றும் விவேகானந்த நலன்புரி நிலையம் என்பன இணைந்து இன்று திங்கட்கிழமை (16) பாடசாலை மண்டபத்தில் வைத்து வழங்கியுள்ளனர்.
பாடசாலை அதிபர் எம்.இசெட்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர்கொழும்பு வலய தமிழ் மொழி பாடசாலைகளுக்கு பொறுப்பான உதவிப் பணிப்பாளர் மஹ்பூப் மரிக்கார், ஆசிரிய ஆலோசகர் ரிஸிஹரன், தமிழர் நலன்புரிச் சங்கத்தின் முக்கியஸ்த்தர்களான எம்.ஏகாம்பரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் பெயர் பலகை, மாணவர் தலைவர்களுக்கான சின்னங்கள் என்பவற்றை விவேகானந்த நலன்புரி நிலையமும்; அதிபர் மேசை, கதிரை, இலத்திரணியல் உபகரணங்கள், அலுவலக மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை நீர்கொழும்பு தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து பாடசாலைக்கு வழங்கியுள்ளன.


59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago