Sudharshini / 2015 ஜூன் 22 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த ஒருவரை கடத்தி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 49ஆயிரம் ரூபாவை கொள்ளையடித்த கோஷ்டியைச் சேர்ந்தவர்களில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவடுவ பாடசாலைக்கு அருகாமையில் வைத்து கப் வாகனத்தில் வந்த சிலர், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை நேற்று ஞாயிற்கிழமை(21) மாலை கடத்தியுள்ளனர்.
கப்ரக வாகனத்தில் கடத்தி;ச்சென்ற அவரிடமிருந்து ரூபா 1 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாவை கொள்ளையடித்துவிட்டு அவரை, வரகாபொல,கரவனல்ல சந்தியில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர்.
தப்பிவந்த குறித்த நபர் சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் இருந்து 49,900 ரூபாவை மீட்டுள்ளதுடன் அவரிடம் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேநபரை வரகாபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago