2025 மே 07, புதன்கிழமை

சட்டவிரோத மது விற்பனை: 12 பேர் கைது

Sudharshini   / 2015 ஜூன் 22 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல பொலிஸாரினால் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தததாக கூறப்படும் பெண்ணொருவர் உட்பட 11 பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள்

ஜா-எல, சீதுவை, ஏக்கல, அநூராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சட்டவிரோத சாராய தயாரிப்புக்கான பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்களை  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X