2025 மே 07, புதன்கிழமை

'புத்தகயாவும் பௌத்தத்தின் முக்கியத்துவமும்' சொற்பொழிவு

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கொழும்பு, காலிவீதியில் அமைந்துள்ள அமெரிக்க நிலையத்தில் இன்று புதன்கிழமை (24) மாலை 5 மணியளவில் 'புத்தகயாவும் பௌத்தத்தின் முக்கியத்துவமும்' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற இருக்கின்றது.

லொஸ் ஏஞ்சல்ஸ் மியூசியத்தில் இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய கிளைக்கான முன்னாள் பொறுப்பாளரும் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் கலை வரலாற்றுத்துறை இணை பேராசிரியருமான ஜனிஸ் லெயோஸ்கோ இந்த சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.

இந்த சொற்பொழிவில் புத்தமதத்தின் செல்வாக்கு மீது உள்ள அங்கீகரிக்கப்படாத அம்சங்கள், 20ஆம் நூற்றாண்டின் 'போல் கயூகுயின்' Paul Gauguinஇன் மற்றும் 'ரட்யார்ட் கிப்ளிங்' Rudyard Kipling போன்ற கலைஞர்களின் கட்புல மற்றும் இலக்கிய படைப்புகளும் பற்றியே விவாதிக்கப்பட உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X