Thipaan / 2015 ஜூன் 28 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுபான்மை இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பிரதிநிதித்துவங்கள் அவசியமானவை. ஆகவே அனைத்து மக்களும் தமது ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் சி.வை.பி.ராம் கோரியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இந்த நாட்டை படுகுழிக்குள் கொண்டுசென்றுகொண்டிருந்த அராஜக ஆட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய ஒத்துழைப்புடன் ஜனவரி எட்டாம் திகதி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் தேசிய அரசாங்கம் அமையப்பெற்றபோதும் நாடாளுமன்ற பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காணப்பட்டிருக்கவில்லை.
எனினும் இந்த நாட்டுக்கு பீடையாக காணப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து உலகநாடுகளுக்கே இலங்கையை முன்னுதாரணமாக காட்டிய பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும்.
அது மட்டுமன்றி சிறுபான்மை பிரதிநிதித்துவங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்ற ஒரே காரணத்துக்காக சுதந்திரக்கட்சி முன்மொழிந்த 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்த்ததும் முக்கியமான விடயமொன்று.
அவ்வாறிருக்கையில் இந்த நாட்டில் நீண்டகாலமாக புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்பாக ஆரம்ப கட்டமாக நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன், பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் குறுகிய காலத்தில் வாழ்வாதார, உட்கட்டமைப்பு செயற்பாடுகளையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் தான் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றது. இதன் பிராகரம் எதிர்காலத்தில் புதிய ஆட்சியொன்று மலரப்போகின்றது.
அந்த அரசாங்கத்தின் உதவியுடனேயே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் உட்பட நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள், தீர்மானங்கள் என்பன எடுக்கப்படவேண்டிய தேவை உள்ளது என்பது யதார்த்தமானதாகும்.
ஆகவே, இந்தப் பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியமை மிகமிக இன்றியமையாததொன்றாகும். எனவே இந்தபொதுத்தேர்தலை பொது மக்கள் அலட்சியப்படுத்தாது அவதானமாக தங்கள் தெரிவுகளை மேற்கொள்ளவேண்டும்.
தமது ஜனநாய கடமையில் இருந்து விலகி நிற்காது உரிமைகளை வென்றெடுப்பதற்கானதொரு தேர்தலான இதனை பயன்படுத்த வேண்டும்.
தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகரிக்கச் செய்யவேண்டும். குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இவ்விடயத்தினை கவனத்திற் கொண்டு தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டியது அவசியமாகும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
21 minute ago
29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
29 minute ago
30 minute ago