2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

டுபாயில் நடந்த ஆங்கில குத்பா போட்டியில் நீர்கொழும்பு மாணவன் முதலிடம்

Thipaan   / 2015 ஜூலை 09 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

வருடா வருடம் இளம் மத போதகர்களை தெரிவு செய்யும் வகையில், 14ஆவது றமழான் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, டுபாய் உலக வர்த்தக நிலையத்தில் அமைந்திருக்கும் ஸபீல் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.

180பேர் பங்குபற்றிய ஆங்கில குத்பா போட்டியில் இலங்கையை சேர்ந்த 11 வயதுடைய றம்ஸான் அய்யாஸ் அஹமட் என்ற மாணவன் முதலிடத்தை பெற்று இலங்கைக்கு பெறுமையை ஈட்டித்தந்துள்ளார்.

இவர் நீர்கொழும்பு லாஸரஸ் வீதியை சேர்ந்த அம்ஜதீன் றம்ஸான் (நிதியியல் முகாமையாளர் ஐஊஊ-டுபாய்) மற்றும் நிஸ்மியா ஹாமீம் அவர்களின் மூத்த புதல்வரும், யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹும் ஏ.எச். ஹாமீமின் பேரனும் ஆவார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X