2025 மே 07, புதன்கிழமை

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: கடைக்கு சேதம்

Kanagaraj   / 2015 ஜூலை 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தில்   இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சிற்றுண்டி  விற்பனை செய்யும் கடையொன்றின் கண்ணாடிகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், ஞாயிற்றுக்கிழமை  இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தளுபத்தை, பல்லன்சேனை வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கே சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கையில், நோன்பு பெருநாளைக்காக கடையை இரண்டு தினங்கள் மூடியிருந்தேன். இன்று திங்கட்கிழமை காலை 6 மணியளவில் கடையை திறப்பதற்கு வந்த போது கடையின் முன் பக்கமாக சிற்றுண்டி தயாரிக்கும் பகுதியின் கண்ணாடிகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதைக் கண்டேன்.

எமது கடை முன்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. அதன்போதே எனது கடைக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலின் போது ஒருவரின் அலை தொலைபேசி கீழே விழுந்துள்ளது. அதுவும் கடை முன்பாக உள்ளது. மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பிரதேசவாசிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

 இந்த சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X