Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 21 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் எழுச்சியே இனவாதிகளின் வீழ்ச்சியாகும். எனவே சலுகைகளுக்காக சோரம் போகாமல் உரிமைகளுக்காக வாக்களிப்போம் என வேட்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்.
எமது உணர்வுகளே உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான மூலவேராகும். எனவே, இந்தப் பொதுத்தேர்தல் எமக்கு முக்கியமானது. எனது அரசியல் வாழ்வு தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே ஆரம்பமானது.
ஆரம்பக் கொள்கையிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் ஆரம்பித்த உரிமைக்கான பயணத்தின் முக்கியமான அத்தியாயத்தை எட்டிப் பிடித்துள்ளது. அதுதான் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலாகும்.
எனவே, அவரின் வெற்றியையும் எனது வெற்றியையும் உறுதிசெய்து நாடாளுமன்றம் அனுப்பும்போது நாடாளுமன்றத்தில் தமிழனுக்கான தன்மானக்குரல் ஒலிக்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago