Princiya Dixci / 2015 ஜூலை 22 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் விட்டுச் செல்கின்ற எங்களுக்கே உரித்தான உணவு கலாசாரத்தை நாட்டில் பிரபல்யப்படுத்தி முறையான உள்ளூர் உணவு உற்பத்தி செயற்பாட்டுக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்நாட்டில் பயிரிடக்கூடிய, இருப்பினும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்ற அனைத்து உணவுப் பொருட்களையும் நிறுத்திவிட்டு நாட்டை தன்னிறைவுள்ள பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்ளூர் உணவு உற்பத்தி நிகழ்ச்சி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருகின்ற உணவுப் பொருட்களுக்காக வருடத்துக்கு சுமார் 154 பில்லியன் ரூபாயை நாம் செலவிடுகின்றோம். அவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற 38 உணவுப் பொருட்களில் பருப்பு, கடலை, அப்பிள் உள்ளிட்ட உள்ளிட்டவற்றை தவிர்த்து ஏனைய அனைத்து உணவுப் பொருட்களையும் எமது நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும். அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த அனைவரையும் சேர்த்துக்கொண்டு இந்நிகழ்ச்சித் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்தோடு, 3 ஆண்டு கருத்திட்டமாக இதை செயற்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி ஆலோசனை கூறினார்.
அத்துடன், அத்திட்டத்தை மூன்று வாரங்களுக்குள் தமக்கு சமர்ப்பிக்கும்படி ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இதன்போது இத்துறையில் சிறந்த அறிவுள்ள அனைவரினதும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
மேலும், தன்னிறைவுள்ள நாடொன்றை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் விவசாயிகள் முகங்கொடுத்துள்ள சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago