2025 மே 07, புதன்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த மூவர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 22 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் ஹெரோய்ன் வைத்திருந்த மூவர், குற்றப் புலனாய்வு பிரிவினாரால் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு 14, ஸ்டேஸ்புர பகுதியைச் சேர்ந்த 26,30 மற்றும் 32 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் 2 கிராம் 780 மில்லிக்கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினார், கைது செய்யப்பட்ட மூவரையும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X